நெல்லையில் சாப்ட்வேர் பயிற்சி மையம் துவக்க விழா.
தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாணவ மாணவியர், இளையோர்கள், மகளிர் என அனைத்து தரப்பினருக்கும் பல்வேறு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அவ்வகையில் ஈஸ்டர்ன் பிராவின்ஸ் ஆப் சிஸ்டர்ஸ் ஆப் செயின்ட் சார்லஸ் நிறுவனத்தின் சார்பில், நெல்லை அக்சஸ் டு நாலேட்ஜ் (A2K Institute) பயிற்சி மையமானது திருநெல்வேலி, பழைய பேட்டையில் தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் பினிஷிங் ஸ்கூல் ஜூனியர் ஜாவா சாப்ட்வேர் டெவலப்பர் பயிற்சியை நடத்துகிறது. அதன் துவக்க விழா இன்று (11-04-2025) நடைபெற்றது.
இவ்விழாவில் திருநெல்வேலி மாநகர 23வது வார்டு உறுப்பினர் அனார்கலி, மதுரை விஸ்காம்னிக்ஸ் டெக்னாலஜி அண்ட் ட்ரைனிங் சர்விசஸ் நிறுவனத்தின் இயக்குநர் ஶ்ரீதர், நெல்லை கே டி சி நகர் தொலைதூரக் கல்வி மையத்தின் நிறுவனர் சசிதா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
மேலும் இம்மையத்தின் முதன்மை பயிற்சியாளரும், A2K இன்ஸ்டிட்யூட் நிருவனருமான அனிதா மற்றும் ஜூனியர் ஜாவா சாப்ட்வேர் டெவலப்மெண்ட் பயிற்றுனருமான வினோத் விழாவிற்கு தலையேற்றனர்.
சிறப்பு விருந்தினரான ஶ்ரீதர் பேசுகையில் சாப்ட்வேர் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்து விவரித்தார்.
சுமார் 30 பட்டதாரி இளையோர்கள் பயிற்சி பெறும் இந்த மையத்தின் துவக்க விழா ஏற்பாடுகளை பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் லூயிஸ் மற்றும் ரூபன் சிறப்பாக செய்திருந்தனர்.