தூத்துக்குடி லூர்து அன்னை ஆலயத்தில் இயேசுபிரான் உயிர்த்தெழும் நிகழ்வில் கிறிஸ்தவ மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தியபடி உலக அமைதி வேண்டி சிறப்பு பிரார்த்தனையில் கலந்துகொண்டார்.
இயேசு கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகளையும், உயிர்நீத்ததையும் நினைவுகூறும் வகையில் கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் 40 நாட்கள் தவக்காலம் கடைப்பிடிக்கின்றனர். அதன் நிறைவாக இயேசு உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு நள்ளிரவு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
தூத்துக்குடியில் உள்ள லூர்தம்மாள்புரம் லூர்து அன்னை ஆலயத்தில் இயேசுபிரான் உயிர்த்தெழும் நிகழ்வு தத்துரூபமாக நடைபெற்றது. பின்னர் பங்குத்தந்தை ஆன்றனி புருனோ தலைமையில், மறை மாவட்ட செயலர் ஆண்டனி ஜெகதீசன் முன்னிலையில் நடைபெற்றது. சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதையொட்டி ஏராளமான கிறிஸ்தவ மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தியபடி உலக அமைதி வேண்டி சிறப்பு பிரார்த்தனையில் கலந்துகொண்டனர்.
இதுபோல் தூய பனிமய மாதா பேராலயம், திரு இருதய பேராலயம், அந்தோணியார் கோவில் ஆலயம், இன்னாசியர் ஆலயம் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர்.