வாகனத்தில் கடத்த முயன்ற 2.5 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் - டிரைவர் தப்பியோட்டம் -தனிப்படை போலீசார் அதிரடி
தூத்துக்குடி மாநகரம்
By Mervin on | 2025-04-13 12:17:07
வாகனத்தில் கடத்த முயன்ற 2.5 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் - டிரைவர் தப்பியோட்டம் -தனிப்படை போலீசார் அதிரடி

தூத்துக்குடியில் சட்ட விரோதமாக கடத்த முயன்ற சுமாா் 2.5 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி-ராமேஸ்வரம் சாலையில் உள்ள டேவிஸ்புரம் பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின்பேரில், நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் மதன் மேற்பார்வையில், தலைமை காவலர்கள் முத்துசாமி, ரவிக்குமார், திருமணி, காவலர்கள் அருண் மற்றும் சிவபாலன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தான். அப்போது அந்த வழியாக வந்த மகிந்திரா போலிரோ வாகனத்தை மடக்கி சோதனை செய்தான்.

அந்த வாகனத்தில் 49 மூட்டைகளில் இருந்த சுமாா் 2.5 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. பறிமுதல் செய்து தாளமுத்து நாக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். மேலும் ஓடிய வாகன ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.




Last Updated by Mervin on2025-05-16 14:30:07

Share:


Leave a Comment
Recent News
Popular News
KADIVAALAM YOUTUBE