தூத்துக்குடி எச் எம் எஸ் சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு தர்பூசணி வழங்கப்பட்டது.
தூத்துக்குடி எச்.எம்.எஸ். உழைப்பாளர் சங்கம் சார்பில் தேசிய தலைவர் ராஜா ஸ்ரீதர் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு கோடை கால தாகத்தை தணிக்கும் வகையில் தர்பூசணி ஜூஸ் வழங்கும் விழா நிகழ்ச்சி ராஜாஜி பூங்கா முன்பு நடந்தது
நிகழ்ச்சிக்கு, தூத்துக்குடி மாவட்ட எச்.எம்.எஸ். உழைப்பாளர் சங்கம் மாவட்ட தலைவர் டாக்டர். ராஜலக்ஷ்மி ராஜ்குமார் தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாவட்ட ஹிந்த் மஸ்தூர் சபா தலைவர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார்
இந்நிகழ்ச்சியில், பிரம்மாண்டமான கேக் வெட்டப்பட்டு அனைவருக்கும் தர்பூசணியை மாவட்டத் தலைவர் ராஜலட்சுமி ராஜ்குமார் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சேவா அறக்கட்டளை தலைவர் முருகன் எச்.எம்.எஸ் மாவட்ட உழைப்பாளர் சங்கம் பொருளாளர் பெஸி, ஒருங்கிணைப்பாளர் நிர்மல், விளாத்திகுளம் ஒன்றிய செயலாளர் வேல புஷ்பம் மற்றும் நிர்வாகிகள் காமாட்சி, நிவியா. சந்திரமணி, விஜி, ராஜேஸ்வரி, மாலதி ராஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.