தூத்துக்குடி கீழசண்முகபுரத்தைச் சோந்தவர் ஆறுமுகம் மகன் பொன் மாரியப்பன் (58). தூத்துக்குடியில் ஒரு நகைக் கடையில் காவலாளியாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று (10-04-25 ) வியாழக்கிழமை மாலை, தனது வீட்டில் ஆஸ்பெஸ்டாஸ் கூரை மீது ஏறி நின்று, மரக்கிளைகளை வெட்டிக் கொண்டு இருந்தாராம். அப்போது எதிா்பாராதவிதமாக ஆஸ்பெஸ்டாஸ் கூரை உடைந்ததால், அவா் அருகிலுள்ள கிணற்றுக்குள் தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து உடனடியாக அவரை மீட்டுள்ளனர் ஆனால் அவர் உயிரிழந்திருந்தார்.
தகவலறிந்த தென்பாகம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.