ஆத்தூர் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு கூட்டம் நடைபெற்றது
தூத்துக்குடி ஆத்தூர்
By Mervin on | 2025-04-06 20:02:31
ஆத்தூர் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு கூட்டம் நடைபெற்றது

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் தேர்வுநிலை பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு கூட்டம் பேரூராட்சி மன்ற தலைவர் ஏ.கே.கமல் தீன் தலைமையில் இன்று (06-04-25 ,) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தூய்மை பணியாளர்களின் நிறைகுறைகளை கேட்டறியப்பட்டது. மேலும் அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் சீருடைகளை வழங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்ட ஒப்பந்ததாரர் மற்றும் பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.




Share:


Leave a Comment
Recent News
Popular News
KADIVAALAM YOUTUBE