சட்டமாமேதை அண்ணல் அம்பேத்கரின் 134 வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர் இந்து இளைஞர் முன்னணி, ஐ பவுண்டேஷன் மற்றும் அருணா கார்டியா கேர் இணைந்து நடத்திய இலவச கண் மற்றும் பொது மருத்துவ பரிசோதனை முகாம் மட்டக்கடை பாலகிருஷ்ணா திருமண மண்டபத்தில் வைத்து இன்று (13-04-25) நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு இந்து இளைஞர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் M.கவி சண்முகம் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் V. P. ஜெயக்குமார், தொழிலதிபர் B.பொய் சொல்லான், வழக்கறிஞர்கள் S. சரவணன், M.சசிகுமார். P. விக்னேஷ் சிங், இந்து முன்னணி மாவட்ட தலைவர். S. இசக்கி முத்துக்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர். P. பலவேசம். மாவட்ட செயலாளர் L.R. சரவணகுமார்.
மற்றும் இந்து இளைஞர் முன்னணி மாவட்ட மண்டல பொறுப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.