தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஹெச்எம்எஸ் மாவட்டத் தலைவர் ராஜலட்சுமி தலைமையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து ஹச்எம்எஸ் உழைப்பாளர் சங்க மாவட்ட செயலாளர் ராஜ்குமார் செய்தியாளர்களிடம் கூறினார், ஹச்எம்எஸ்
கட்டுமான அமைப்புசாரா ஆட்டோ தொழிலாளர்களின் கடிமான உழைப்பிற்காக அவர்களை ஊக்குவிக்கும் வகையில் நல வாரியத்தில் பதிவு பெற்ற அனைத்து தொழிலாளர்களுக்கும் ஆண்டுதோறும் தீபாவளி போனஸ் ரூ. 7000 வழங்கப்பட வேண்டும் எனவும் இவ்வாறு போனஸ் பெறுவதால் தொழிலாளர்களுக்கான சட்ட சமூக பாதுகாப்பு பெறுவதில் முன்னேற்றம் பெறுவதோடு உரிய காலத்தில் புதுப்பித்து செய்திட அக்கறை கொள்ளவும் புதிதாக நல வாரியத்தில் பதிவு செய்யும் தொழிலாளர்கள் விழிப்புணர்வு பெறுவார்கள் என தமிழ்நாடு அரசு மற்றும் வாரியத்தின் நிர்வாக மேலான கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் கடந்த மூன்று ஆண்டுகளாக புகார் அளித்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. பணியாளர்களுக்கு அரசு சார்ந்த ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்படுகிறது. அதைப்போல் எம்.எஸ்.எஸ் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் இந்த உதவித்தொகை கொடுத்தால் தீபாவளி சமயத்தில் அவர்களுக்குப் பேருதவியாக இருக்கும் குறைந்தபட்ச சம்பளத்தைப் பெற்றுக் கொள்வதில் அன்றாடக் குடும்பம் பாதிக்கப்பட்டுள்ளது, அதனால் விழா கால தீபாவளி போனஸ் வழங்கப்பட வேண்டும் என இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்ததாகத் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், ஹச்எம்எஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நிர்மல், பொருளாளர் பெஸ்ஸி நிர்மல், இணைச் செயலாளர் மகளிர் அணி சந்திரமணி, மரியா திவ்யா, விஜி, சரோஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.