தூத்துக்குடி 1ம் கேட் ஆதி பரமேஸ்வரி அம்மாள் 18ம் படி கருப்பசாமி திருக்கோவில் தசரா உற்சவ விழா கடந்த 2ம் தேதி தொடங்கி தினமும் சிறப்பு அலங்காரத்துடன் கூடிய பூஜைகள் நடைபெற்று வந்தது.
10ம் திருநாளையொட்டி நடைபெற்ற சமபந்தி அன்னதானத்தை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார். முன்னதாக கோவிலில் சாமி தாசினம் செய்தார்.
விழாவில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், கவுன்சிலர்கள் சரண்யா, ராமுஅம்மாள், மாயகீதா மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமாா், மாவட்ட பிரதிநிதி ராஜ்குமாா், வட்ட அவைத்தலைவர் மாயாண்டி, செயலாளர் சாமிநாதன், பொருளாளர் சரவணன்,
வட்டப்பிரதிநிதிகள் மைதீன்பாட்ஷா, மோகன்ராஜ், ராம் ஜெய்கணேஷ், ஷெல்டன், துணைச்செயலாளர்கள் கந்தன், ஸ்டீபன், மாணவரணி ஆஷிக், பொறியாளர் அணி பாசில், நெசவாளர் அணி நாகராஜ், மற்றும் தனபால், மாயிமுத்து, சந்தனம், மாயப்பன், சந்தனராஜ், கருணா, மணி ஆல்பட் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இரவில் சூரசம்ஹாரம் நடைபெற்றது.