தூத்துக்குடி பிரஸ் கிளப் அலுவலகத்தில் இன்று சரஸ்வதி பூஜை விழா நேற்று கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி பிரஸ் கிளப் தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில், செய்தி சேகரிக்கும் கேமரா, லோகோ மற்றும் பலவிதமான பழங்கள் பூஜையில் வைத்து சாமி படங்களுக்கு தீபாராதனை உள்ளிட்ட அர்ச்சகர் வழிபாடு நடைபெற்றது.
சங்க செயலாளர் மோகன்ராஜ், பொருளாளர் ராஜு, துணைத் தலைவர் சிதம்பரம், இணைச் செயலாளர் சதீஷ்குமார், கௌரவ ஆலோசகர் அருண், ஆத்திமுத்து, பாலகிருஷ்ணன், மன்ற செயற்குழு உறுப்பினர்கள் லட்சுமணன், ரவணபெருமாள், குமார், மாரி ராஜா, கண்ணன், கார்த்திக், முத்துராமன், இருதயராஜ் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் ஜெயராம், வேல்முருகன் முத்துக்குமார், சையது அலி சித்திக், மகாராஜன், நீதிராஜன், அறிவழகன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதைத் தொடர்ந்து சங்க நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஆர்வத்துடன் 2024 ஆம் ஆண்டு சந்தாவை சங்கத்தின் பொருளாளர் ராஜுவிடம் செலுத்தி வருகின்றனர்.