திமுக ஆட்சிதான் இந்துக்களுக்கு பொற்காலம் தூத்துக்குடி சண்முகபுரம் கோவில் தசரா விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேசினார்
தூத்துக்குடி மாநகரம்
By Mervin on | 2024-10-12 10:32:10
திமுக ஆட்சிதான் இந்துக்களுக்கு பொற்காலம் தூத்துக்குடி சண்முகபுரம் கோவில் தசரா விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேசினார்

தூத்துக்குடி சண்முகபுரம் இந்துநாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவில் தசரா விழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி தினசரி அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெற்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. 9ம் நாள் நவராத்திரி சரஸ்வதி பூஜையையொட்டி 51ம் ஆண்டு சண்முகபுரம் இளைஞர் முன்னேற்ற அணியினர் சார்பில் நடைபெற்ற இன்னிசை நிகழ்ச்சிக்கு இளைஞர் அணி ஓருங்கிணைப்பாளரும் திமுக வட்டச்செயலாளருமான பொன்ராஜ் தலைமை வகித்தார். அமைப்பாளர்கள் முத்துமாரியப்பன், சுரேஷ், முத்துக்குமார், ராஜேஷ், செல்வசுபாஷ், சூரியகாந்த், ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர் பேபி ஏஞ்சலின் அனைவரையும் வரவேற்றார். 

சிறப்பு விருந்தினராக வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து இன்னிசை கச்சேரியை கண்டுகளித்து பின்னர் இளைஞர் அணி சார்பில் பரிசு குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 50 பரிசு பொருட்கள் வழங்கி அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் சிறப்பான நிகழ்ச்சி நடைபெற்றது. இன்னிசை கச்சேரி நம் எல்லோருக்கும் ஒரு குறிப்பிட்ட நேரம் வரை அனைவருக்கும் உள்ளத்தில் ஒருவகையான மகிழ்ச்சியை ஏற்படுத்தி நிம்மதியை கொடுக்கும் நிகழ்வாகும் இசைக்கு எல்லோரும் அடிபணிந்து ரசிப்பார்கள் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு மூன்றரை ஆண்டு காலத்தில் அறநிலையத்துறை சார்பில் 1000 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதே போல் 5 ஆயிரம் கோடிக்கு அதிக மதிப்பிலான அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்கள் மீட்கப்பட்டுள்ளன. திமுக ஆட்சிதான் இந்துக்களுக்கு பொற்காலம். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அனைத்து மதத்தினரும் மகிழ்ச்சியாக உள்ளனர். எல்லா மதத்ததையும் நாங்கள் மதிக்கிறோம். கடந்த அதிமுக ஆட்சியின் போது கொரோன காலக்கட்டத்தில் எல்லோருமே முடங்கிபோய் கிடந்தோம் எந்த வளர்ச்சியும் இல்லை. இப்போது திமுக ஆட்சி வந்தபிறகு அனைத்து கோவில்களிலும் அனைத்து நிகழ்ச்சிகளும் நல்ல முறையில் நடைபெறுகிறது. அதே போல் வியாபாரிகளுக்கு இரவு 10 மணி வரை இயங்கலாம் என்று அவர்களின் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் ஸ்டாலின் 12மணி வரை கடைகளை திறந்திருப்பதற்கு ஆணை பிறப்பித்துள்ளார். இப்படி தமிழகத்தில் எல்லா துறைகளிலும் நல்ல வளர்ச்சியடைந்து பொருளாதார நிலை உயர்ந்து இந்தியாவிற்கே வழிகாட்டும் முதன்மை மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. பத்திரகாளியம்மன் கோவில் அம்மன் அருளாசியோடு அனைவரும் அனைத்து செல்வங்களையும் பெற்று ஓற்றுமையுடன் நலமுடன் வாழ வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன் என்று பேசினார். 

விழாவில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட பொருளாளர் ரவீந்திரன், கோவில் தர்மகர்த்தா பழனிச்சாமி, செயலாளர் கார்த்திக்ராஜா, பொருளாளர் செல்வராஜ், துணைத்தலைவர் தனபாலன், தணிக்கையாளர் சிவக்குமாா், தொழிலதிபர் சுந்தர்ராஜ், திருப்பணி கமிட்டி முன்னாள் செயலாளர் சண்முகசுந்தரம், மாநில பேச்சாளர் சரத்பாலா, மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் ராஜப்பிரகாதிநிந்தாக்கள், பாஸ்கா, நிர்வாகிகள் கலியுகவரதன், சந்தர், ரவி, பாஸ்கர், மற்றும் கருணா, மணி, அல்பட், பக்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.




Share:


Leave a Comment
Recent News
Popular News
KADIVAALAM YOUTUBE